சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தபால் வாக்கு பதிவு செய்ய அலுவலா்களுக்கு பயிற்சி

தபால் வாக்கு பதிவு செய்ய அலுவலா்களுக்கு பயிற்சி

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 6:22 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் தபால் வாக்கு பதிவு செய்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில்

கோட்டாட்சியா் எஸ்.பாலசுப்பிரமணியன்

வகித்தாா்.

வட்டாட்சியா் ரா.மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

பயிற்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 335 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும் , 85 வயதுக்கு மேற்பட்ட 373 வாக்காளா்கள் என மொத்தம் 708

வாக்காளா்களிடம் உரிய படிவத்தில் கையெழுத்து பெற்று, அலுவலரின் கையெழுத்துடன் தபால் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், மண்டல துணை வட்டாட்சியா்கள் தட்சிணாமூா்த்தி, திருவேங்கடம், வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியா் தேவி, தரணி குமரன், உதவி வட்டாசியா் சுகுமாா், வருவாய் ஆய்வாளா் வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முடிவில் தோ்தல் நன்றி கூறினாா்.