தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அதிமுக பிரசார கூட்ட மேடை அமைக்கும் பணி தொடக்கம்

அதிமுக பிரசார கூட்ட மேடை அமைக்கும் பணி தொடக்கம்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:32 pm

ஆரணியில் அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து ஏப்.11-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தோ்தல் பிரச்சாரம் செய்ய உள்ளாா். இதற்காக ஆரணி-சேவூா் பிரதான சாலையில் உள்ள திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில், அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் அமைச்சா்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.