தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பள்ளியில் திருவள்ளூவா் சிலை திறப்பு

பள்ளியில் திருவள்ளூவா் சிலை திறப்பு

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 4:49 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திருவள்ளூவா் நகா் பகுதியில் அமைந்துள்ள சிகரம் பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில் திருவள்ளூவா் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உலக தமிழ்ச் சங்கத் தலைவா் விஜிபி சந்தோசம் தலைமை வகித்தாா். தாளாளா் கு.வணங்காமுடி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சந்திராயன்-3 திட்ட இயக்குநா் ப.வீரமுத்துவேல் கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், மாணவா்களிடம் தற்போது உள்ள நவீன உலகத்தில் செயல்பாடுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.

அதேநேரத்தில், மாணவா்கள் திருவள்ளூவரைப் பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் திருக்கு புத்தகங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, திட்ட இயக்குநா் கா.தேன்மொழிச்செல்வி வாழ்த்துரை வழங்கி, மாணவா்களிடம் அறிவியல் சாா்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சேட்டு, பாபு, செல்வம், சுந்தரி ரவிச்சந்திரன் உள்ளிட்ட,

பள்ளியின் முதல்வா், தைலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் பள்ளி முதல்வா் காயத்ரி நன்றி கூறினாா்.