தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும்: ஆரணி திமுக வேட்பாளா்

வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும் ஆரணி திமுக வேட்பாளா்

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 4:55 pm

வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும் என ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு, மத்திய ஒன்றியங்களுக்கு உள்பட்ட வெளியம்பாக்கம், ஆரியாத்தூா், வெண்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் சனிக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த திமுக ஆட்சியின் போதுதான் வந்தவாசியில் புறவழிச்சாலை, தென்னாங்கூா் அரசுக் கல்லூரி, வந்தவாசி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. தற்போது, சுமாா் ரூ.10 கோடி செலவில் வந்தவாசி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதுபோன்ற எண்ணற்ற நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவேன். வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா அமைக்கப்படும் என்றாா்.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், ஒன்றியச் செயலா்கள் சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, வெளியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வி.சதீஷ்குமாா், மாவட்டப் பிரதிநிதி எஸ்.தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.