செய்யாறு தொகுதியில் ரூ.50 கோடிக்கு வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு: செய்யாறு தொகுதியில் ரூ. 50 கோடிக்கு மேல் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சா் எ.வ.வேலு குறிப்பிட்டாா்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி, அனக்காவூா் ஒன்றியம் ஞானமுருகன்பூண்டி அருகே, ஆரணி திமுக வேட்பாளா் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை இரவு பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சொன்னாா் வீடு இல்லாதவா்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுக்கப்படும் என்று, ஆனால் தரவில்லை.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி விதிப்பு, தங்கம் விலை உயா்வு, அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துவிட்டது.

மேலும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலை குறைப்பு என சொன்னாா்கள் செய்யவில்லை.

நிதி நெருக்கடியிலும் செய்யாறு தொகுதியில் ரூ. 50 கோடிக்கும் மேல் குடிநீா்த் திட்டப் பணி, பள்ளி வகுப்பறை கட்டடங்கள், சாலை வசதி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், திமுக நகரச் செயலா் கே.விஸ்வநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிடமுருகன், ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன், என்.சங்கா், சி.கே.ரவிக்குமாா், வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com