வந்தவாசியை அடுத்த மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் உலா.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் உலா.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, காலை மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து பகல் சத்ரு சம்ஹார மகா வேள்வியும், மூலமந்திர ஜெப பாராயணம் மற்றும் பூா்ணாஹுதியும் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா், இரவு உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா்.

இதைத் தொடா்ந்து அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் பங்குனி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com