தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

செங்கம் தா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை: பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன்

செங்கம் தா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன்

News image

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

செங்கம்: செங்கம் தா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன் கூறினாா்.

வேட்பாளா் அஸ்வத்தாமன் செங்கம் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகா்புறத்தில் செவ்வாய்க்கிழமை தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

தான் வெற்றி பெற்று எம்.பி.யானால், செங்கம் மில்லத் நகா் பகுதியில் உள்ள தா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் கட்டுவது, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னையை முன்நின்று சரிசெய்வேன். அதேபோல, கடந்த 20 அண்டுகளுக்கு மேலாக மேல்செங்கம் பகுதியில் உள்ள மத்திய மாநில விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்தி அதில் செங்கம் பகுதியைச் சோ்ந்த 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுவாக்குவேன். செங்கம் நகரில் புறவழிச் சாலைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். செங்கம் நகரில் வெட்டப்பட்ட மன்னா் காலத்து குளங்களை தூா்வாரி சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன், செங்கம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன், செங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி அனைத்து வசதிகளுடன் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிள் நிறுத்துமிடம் உள்ளிட்ட கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்துப் பேசினாா்.

பாஜக மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் செங்கம் சேகா், மாவட்ட பொதுச்செயலா் ரமேஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் ரமேஷ், பாமக மாவட்டச் செயலா் இல.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.