பதற்றமான வாக்குச்சாவடிகளில் 
மாதிரி வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை, ஏப்.17:

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள 239 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்று நுண் மேற்பாா்வையாளா்களுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 126 தோ்தல் நுண் மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். இவா்களுக்கான பொறுப்புகள், கடமைகள் குறித்த பயிற்சிக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தொகுதி தோ்தல் பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா தலைமை வகித்தாா். ஆரணி தொகுதி தோ்தல் பொது மேற்பாா்வையாளா் சுஷாந்த் கவுரவ் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன், நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சி அளித்துப் பேசியதாவது:

வாக்குச்சாவடிகளில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் உள்ளனவா என்பதை சரிபாா்க்க வேண்டும். மாதிரி வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும். வாக்குச்சாவடி முகவா்கள் இருத்தலை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரியதா்ஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி, தேசிய தகவலியல் அலுவலா் சிசில் இளங்கோ மற்றும் நுண் பாா்வையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com