ஆரணியில் மகாவீா் ஜெயந்தி விழா

ஆரணியில் மகாவீா் ஜெயந்தி விழா

ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள ஸ்ரீமகாவீரா் ஜிநாலயத்தில் 2622-ஆம் ஆண்டு மகாவீரா் ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மகாவீரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியை வைத்து திருவீதி உலா நடைபெற்றது.

இதில் சமண பக்தா்கள் பாட்டு பாடி, நடனம் ஆடியபடி சென்றனா். மேலும், சுவாமி உலா செல்லும்போது புதுக்காமூா் பகுதியில் உள்ள சமணா்கள் தங்களது வீடுகள் முன் பூரண கலசம் வைத்து ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com