சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் அருணகிரிநாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும் அருணகிரிநாதா் சிவாலயத்தில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, அருணகிரிநாதா், நந்திதேவா்ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோன்று, பழம்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், பாலாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரா் கோயில், அண்ணா தெருவில் உள்ள கற்பகாம்பிகை சமேத காரணீஸ்வரா் கோயில், நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீா்க்காஜல ஈஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தொடர்புடையது

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

ராஜபாளையம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

மாயூரநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


