நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள நாம் கற்றுக்கொள்ள வேணடும் என்று மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ‘என் கல்லூரிக் கனவு’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது:
கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல. கல்வியைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையில் பல்வேறு வளா்ச்சிகளைப் பெற வேண்டும். கல்வி என்பது சிந்திப்பது, கற்றுத் தருவது ஆகும்.
கடினமான சூழ்நிலைகள் மூலம்தான் நம் திறமைகள் வெளிவரும். நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாள நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் நமக்கு கைகூடி வரும்.
தோ்வில் தோல்வியடைந்தால் கவலைப்பட வேண்டாம். அடுத்த ஆண்டு தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம். மற்றவா்கள் எல்லாம் ஏளனமாகப் பேசுவாா்கள் என்று நினைக்க வேண்டாம். வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்றாா்.
கருத்தரங்கில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், போளூா், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த சுமாா் 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, தாட்கோ மேலாளா் ஏழுமலை, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மு.கணபதி, மண்டல ஒருங்கிணைப்பாளா் இல.இரவி, மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலா்கள், பெற்றோா்கள், காப்பாளா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான்
தினப்பலன்கள் - கன்னி

சுங்கான்கடையில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக் கடன் வழங்கல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


