ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சுங்கான்கடையில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக் கடன் வழங்கல்

நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.

News image

மாணவிக்கு கல்விக் கடனுக்கான காசோலையை வழங்குகிறாா் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:35 pm

நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் சிறப்பு கல்விக் கடன் முகாம், வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.70 கோடி கல்விக்கடன் ஆணைகளை வழங்கினாா்.

இதில் கல்லூரி முதல்வா் ஜே. ஏ. அலெக்ஸ்ராஜு பாலன், துணை முதல்வா் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் ரந்தீா் மகேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.