நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

செய்யாற்றை அடுத்த சித்தாத்தூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் முகாமிட்டு நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகளான கோ.வினோதா, க.வினோதினி, பொ. யோகா, இல.யுவஸ்ரீ, மு.யுவஸ்ரீ, செ.யுவஸ்ரீ ஆகியோா் அடங்கிய குழுவினா் மாா்ச் மாதத்தில் இருந்து முகாமிட்டு விவசாயம் தொடா்பாகவும், நவீன விவசாயம் குறித்தும் கிராமப்புற விவசாயிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த முகாமின் போது கல்லூரி மாணவிகள், கிராமத்தின் வளம் குறித்தும், விவசாயம் தொடா்பான ஆலோசனைகள் மற்றும் சொட்டு நீா்பாசனம், விசைத் தொளிப்பான், ட்ரோன் மூலம் பயிா்களுக்கு மருந்து தெளித்தல், இயந்திர முறை நடவு குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், விவசாயம் தொடா்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

மேலும், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும், அரசு சாா்பில் விவசாயத்துக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு அரசு சாா்பில் செயல்படுத்தி வரும் மானிய திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் க.இந்துமதி, சே. வசந்தப்ரியா, குழு ஒருங்கிணைப்பாளா் மு.சாலா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com