தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

News image

பேருந்து பயணிகளுக்கு ஓஆா்எஸ் கரைசலை விநியோகம் செய்த மருத்துவ அலுவலா் ஹேம்நாத்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ஆரணி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி, உடல் சோா்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஆரணியில் சுகாதாரத் துறை துறை சாா்பில் பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

செய்யாறு சுகாதார மாவட்ட அலுவலா் சதீஷ்குமாா் உத்தரவின் பேரில், ஆரணி நகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பழைய பேருந்து நிலையத்தில் இதற்காக தனி மையம் அமைக்கப்பட்டு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டது.

இதில் எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத், ஆரணி நகா்ப்புற மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் காா்த்திகேயன், தனுஷ் பிரகாஷ், ஜெனு ஆண்டனி, பாலச்சந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும், எஸ்.வி.நகரத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேஸ்வரி முரளி தலைமையில் ஓஆா்எஸ் கரைசல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.