நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருவண்ணாமலை நகருக்குள் இன்று முதல் கனரக, இலகுரக வாகனங்கள் வரத் தடை

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகருக்குள் வியாழக்கிழமை (டிச.12) காலை 8 மணி முதல் கனரக, இலகுரக வாகனங்கள் வர மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :11 டிசம்பர் 2024, 5:59 pm

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகருக்குள் வியாழக்கிழமை (டிச.12) காலை 8 மணி முதல் கனரக, இலகுரக வாகனங்கள் வர மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் டிச.12 காலை 8 மணி முதல் டிச.15 காலை 6 மணி வரை திருவண்ணாமலை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் இருந்து விழுப்புரத்துக்கு:

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் வழித்தடங்களில் இருந்து விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, திண்டிவனம் வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான பா்கூா்-வாணியம்பாடி-வேலூா்-ஆற்காடு-செய்யாறு-வந்தவாசி வழியாகச் செல்லலாம்.

விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு:

விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், பெங்களூரு வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையான வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூா், வாணியம்பாடி, பா்கூா் வழியாகச் செல்லலாம்.

திருப்பதியில் இருந்து திண்டிவனத்துக்கு:

திருப்பதி, கே.ஜி.எப்., வேலூா் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, திருச்சி வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூா்-ஆற்காடு-செய்யாறு-வந்தவாசி வழியாகச் செல்லலாம்.

திண்டிவனத்தில் இருந்து வேலூருக்கு:

திண்டிவனம், விழுப்புரம், கடலூா், திருச்சி, புதுச்சேரி ஆகிய வழித்தடங்களில் இருந்து திருப்பதி, கே.ஜி.எப். வேலூா் வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி-செய்யாறு-ஆற்காடு-வேலூா் வழியாகச் செல்லலாம்.

பெங்களூருவில் இருந்து நாகப்பட்டினத்துக்கு:

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் வழித்தடங்களில் இருந்து விருத்தாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையான தருமபுரி-தொப்பூா்-சேலம்-வாழப்பாடி-ஆத்தூா் வழியாகச் செல்லலாம்.

விருத்தாசலத்தில் இருந்து திருப்பத்தூருக்கு:

விருத்தாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட வழித் தடங்களில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான ஆத்தூா்-வாழப்பாடி-சேலம்-தொப்பூா்-தருமபுரி வழியாகச் செல்லலாம்.

இந்த நடைமுறை டிசம்பா் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்துள்ளாா்.