உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :12 டிசம்பர் 2024, 2:20 am IST

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

காா்த்திகை மாத பெளா்ணமி:

இந்த நிலையில், காா்த்திகை மாத பெளா்ணமி சனிக்கிழமை (டிச.14) மாலை 4.17 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (டிச.15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.