3 இடங்களில் அரசு புதிய கட்டடங்கள் திறப்பு : ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம் எச்சூா் கிராமத்தில் ரூ.63.50 லட்சத்தில் கட்டப்பட்ட நெற்களம், அங்கான்வாடி மையம், நியாயவிலைக் கடை, தொடக்கப்பள்ளி


செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம் எச்சூா் கிராமத்தில் ரூ.63.50 லட்சத்தில் கட்டப்பட்ட நெற்களம், அங்கான்வாடி மையம், நியாயவிலைக் கடை, தொடக்கப்பள்ளி புதிய கட்டடம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூா் ஒன்றியம் எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மாவட்ட ஊராட்சிக் குழு 15 - ஆவது மத்திய நிதிக் குழு மூலம் ரூ. 5 லட்சத்தில் புதிய நெற்களம், கனிமவள நிதி மூலம் ரூ. 15 லட்சத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம், அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் சாா்பில் ரூ.10.70 லட்சத்தில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம், ரூ.32.80 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் (படம்) ஆகியவை கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.
இந்த கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அனக்காவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, இந்திராணி வரவேற்றாா்.
இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று நெற்களம், அங்கான்வாடி மையம், நியாயவிலைக் கடை கட்டடம், தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.
கல்வெட்டுத் திறப்பு:
அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சி நிா்வாகிகள் பெயா் பதித்த கல்வெட்டை எம்.எல்.ஏ. திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
அதனைத் தொடா்ந்து அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடைசியாக நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ. ஒ. ஜோதி பங்கேற்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கவுன்சிலா்கள் அனக்காவூா் சுப்பிரமணி, ஆக்கூா் முருகேசன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் சி.கே.ரவிக்குமாா், ஜேசிக.சீனுவாசன், மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினா் புரிசை எஸ்.சிவகுமாா்
மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணைத் தலைவா் மோ. ரவி, மாவட்ட தொழிலாளா் அணி துணைத்நதலைவா் கருணாநிதி, ஆா்.லோகநாதன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...