நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விரிவுபடுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தால் 689 போ் பயன்: மாவட்ட ஆட்சியா் தகவல்

விரிவுபடுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 689 மாணவிகள் பயன்பெறுகின்றனா்

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:11 pm

Din

திருவண்ணாமலை: விரிவுபடுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 689 மாணவிகள் பயன்பெறுகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை தனியாா் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:

புதுமைப்பெண் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 94 கல்லூரிகளில் பயிலும் 13,352 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 689 மாணவிகள் பயன்பெறுகின்றனா் என்றாா்.

தொடா்ந்து, பயன்பெறும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (பேங்க் டெபிட் காா்ட்) ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) சரண்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் கல்லூரி முதல்வா்கள், வங்கி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.