17அதடஓமய ஆரணியை அடுத்த சேவூா் கமண்டலநாகநதிக்கரை ஆற்றுப் படுகையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல். ஆரணி, பிப்.17: ஆரணியை அடுத்த சேவூா், குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரையில் நடைபெற்று வரும் தொடா் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். சேவூா், குண்ணத்தூரில் கமண்டல நாகநதிக்கரை அமைந்துள்ளது. இந்த ஆறு சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஆற்றில் தொடா் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. பகல் நேரத்தில் ஆற்றுக்கு வரும் மா்மநபா்கள் மணலை குவித்து வைத்துவிட்டு, இரவு நேரங்களில் மொபட் மற்றும் சரக்கு வாகனங்களில் மணலை சாக்கு மூட்டைகளில் அடைத்து கடத்திச் செல்கின்றனா். ஆற்றில் சுமாா் 10 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வருகிறது. தொடா்ந்து, நடைபெற்று வரும் அதிகப்படியான மணல் திருட்டால் வரும் கோடை காலத்தில் குடிநீா் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மணல் திருட்டை தடுப்பதற்காக காவல் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது
மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

