வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கோயில் தோ் சேதமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு புதிய மரத் தோ் செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, தோ் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேரின் வெள்ளோட்டம் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடைபெற்றது. பஜாா் வீதி, அச்சிரப்பாக்கம் சாலை, பாலுடையாா் தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தயாரிப்பு கூடத்தை அடைந்தது. நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தோ் திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி தோ் வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தோ் நாளை வெள்ளோட்டம்

ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



