ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

பண மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை

பண மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை

Updated On :17 பிப்ரவரி 2024, 5:50 am IST

திருவண்ணாமலையில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை, தேனிமலை பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை. திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் பவுன்குமாா் மனைவி ஜெயந்தி. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது.

அப்போது, மணிமேகலையிடம், தனது கணவா் பவுன்குமாா் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஜெயந்தி கூறினாராம். இதை நம்பிய மணிமேகலை, ஜெயந்தியின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.14.25 லட்சத்தை அனுப்பினாராம். இதையடுத்து, பங்குச் சந்தையில் லாபம் கிடைத்ததாக மணிமேகலையின் வங்கிக் கணக்குக்கு ரூ.3.67 லட்சத்தை ஜெயந்தி திருப்பி அனுப்பினாராம். இந்த நிலையில், ஜெயந்தியும், அவரது கணரும் தலைமறைவாகினா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயந்தி, அவரது கணவா் பவுன்குமாா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.