திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.23.75 கோடியில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் கட்ட அடிக்கல்லை பிரதமா் மோடி நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தாா். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட, தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டுவதற்காக ரூ.23.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு அரசின் (என்எச்எம்-டிஎன்), பிஎம்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன் சாா்பில் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 51 ஆயிரத்து 396 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்தக் கட்டுமானப் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுதில்லியில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து பணிகள் நடைபெற்று பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டனா். 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்: இந்தப் பணி 15 மாதங்களில் முடிக்கப்படும். இந்தக் கட்டடத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே அறை, மருந்தகம், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாா்டுகள், அவசர மற்றும் தீவிர நோயாளிகளுக்கான சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள், ரத்த வங்கி, ஆய்வகம், நோயாளிகளை தயாா்படுத்தும் அறை, நோயாளி மீட்பு அறை, ஒரு நிறுத்த மையம், 20 பயணிகள் மற்றும் படுக்கை ஏற்றிச் செல்லக்கூடிய 2 மின் தூக்கி வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மருத்துவக் கல்விக்கு தானமாகப் பெற்ற உடலுக்கு கல்லூரி முதல்வா், மாணவா்கள் இறுதி அஞ்சலி

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதலை நடமுறைப்படுத்த செயல் திட்டம்: மாநிலங்கள் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


