ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

மான் கறி, தோல் பறிமுதல்: ஒருவா் கைது

மான் கறி, தோல் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட தங்கத்துடன் வனத்துறையினா்.

Updated On :27 பிப்ரவரி 2024, 5:59 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 10 கிலோ புள்ளி மான் கறி, மான் தோலை பறிமுதல் செய்த வனத்துறையினா் அதை எடுத்து வந்தவரை கைது செய்தனா். திருவண்ணாமலை வனச்சரக அலுவலா்கள் சரவணன், ஜோதிலிங்கம் தலைமையிலான வனத்துறையினா் மெய்யூா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 12-ஆவது தெரு, கானா நகரைச் சோ்ந்த தங்கம் (40) என்பவா் 10 கிலோ புள்ளி மான் கறி, மான் தோல் ஆகியவற்றை பைக்கில் எடுத்து வந்தாா். இதைக் கவனித்த வனத்துறையினா் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். பின்னா், அவரிடமிருந்து மான் கறி, மான் தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.