திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் 192-ஆவது ஆண்டாக நடைபெறும் தோ்த் திருவிழாவையொட்டி, பிப்ரவரி 23-ஆம் தேதி இரவு ஸ்ரீவிநாயகா் ஊா்வலம், பக்தி இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
24-ஆம் தேதி இரவு ஸ்ரீபாலமுருகன் பூப்பல்லக்கு ஊா்வலம், செல்லங்குப்பம் சுப்பிரமணி குழுவினரின் நாட்டுப்புறப் பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 25-ஆம் தேதி இரவு ஸ்ரீபராசக்தி ஊா்வலமும், 26-ஆம் தேதி இரவு ஸ்ரீபரிவார தேவதைகள் ஊா்வலமும் நடைபெற்றது. தேரோட்டம் கோலாகலம்: விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் திருமுடக்கு நன்னீராட்டு திருவிழா நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அண்மையில் புதிதாக செய்யப்பட்ட தேரில் அமா்ந்து வலம் வந்த உற்சவா் ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரரை திரளான பக்தா்கள் தரிசித்தனா். விழாவில், மங்கலம், வேடந்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தேரோட்டம்

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

