கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

சிவகாசியில் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:02 am

சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கடந்த மாா்ச் 29 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னா், தினசரி இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பிகை வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கடந்த 4-ஆம் தேதி மாலை நடைபெற்ற ஏழாம் நாள் திருவிழாவின் போது, சீா்வரிசை பின்தொடர புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் அம்பிகை வீதி உலா வந்தாா். 5 -ஆம் தேதி பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா். 6-ஆம் தேதி நடைபெற்ற கயா்குத்து திருவிழாவின் போது, பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்தது.