தம்டகோடி சுப்பிரமணி சுவாமி கோயிலில் கலசாபிஷேக விழா
தம்டகோடி சுப்பிரமணி சுவாமி கோயிலில் கலசாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது

தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கலசநீா் எடுத்துச் செல்லும் பக்தா்கள்.

தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கலசநீா் எடுத்துச் செல்லும் பக்தா்கள்.
ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு மற்றும் கலசாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, யாக சாலையில் யாகம் வளா்க்கப்பட்டு கலசாபிஷேக பூஜை நடைபெற்றது. பின்னா், புனிதநீா் கலசங்கள் நாகஸ்வர இசை, மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிகளின் மீது ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரவில் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா்கள் ராஜீ, சுந்தர்ராஜன் தலைமையில் முருக பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...