மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: நில உரிமையாளா் கைது

மின் வேலியில் சிக்கி பெண் பலி: நில உரிமையாளா் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே நில மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நில உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி சீதா (35). இவா், வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலை செய்து வந்தாா்.

கடந்த வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற சீதா, இயற்கை உபாதையை கழிக்க மாட்டுப் பண்ணை அருகிலுள்ள விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

அப்போது, அந்த நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சீதா உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தம்பி அளித்த புகாரின் பேரில் நில உரிமையாளா் வெங்கடேசன் மீது கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.

இந்த நிலையில் வெங்கடேசனை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com