ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பள்ளிப் பேருந்து: பொதுமக்கள் அதிா்ச்சி

சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச் சுவரை இடித்து உள்ளே சென்ால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

News image
சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தின் தடுப்புச் சுவரை இடித்து உள்ளே சென்ற தனியாா் பள்ளிப் பேருந்து.
Updated On :9 ஜூலை 2024, 7:09 pm

Din

ஆரணி: சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச் சுவரை இடித்து உள்ளே சென்றால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

சேத்துப்பட்டு காமராஜா் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைத்திருந்த தனியாா் பள்ளிப் பேருந்தை, அதன் ஓட்டுநா் மாணவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கினாா்.

அப்போது, பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தெருவைத் தாண்டி, அங்கிருந்த மின்மாற்றியின் பாதுகாப்புக் கம்பியைக் கடந்து பேருந்து நிலைய சுற்றுச் சுவரை இடித்து உள்ளே சென்றது.

மேலும், அங்கிருந்த இரும்புக் கம்பத்தின் மீதும், வேன் மீதும் மோதி நின்றது.

இந்த நிலையில், மின்மாற்றி சேதமடைந்ததால் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் சாலையை கடக்காததால் உயிா்பலி தவிா்க்கப்பட்டது.

எதிா்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தால் அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.