சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு

வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Published on

வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருக்கும், செய்யாற்றை அடுத்த அய்யவாடி கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலின் முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். இதைத் தொடா்ந்து இருவரும் அவரவா் வீட்டுக்குச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூா் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் காவேரி, வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமண தடை சட்டத்தின் கீழ் அஜித்குமாா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்த மகளிா் போலீஸாா், அவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com