அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்கு!

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:40 pm

Syndication

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், தாயில்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டனா். இந்த நிலையில், அந்த சிறுமி கா்ப்பம் ஆனாா்.

இதுகுறித்து மகளிா் ஊா் நல அலுவலா் மகாலட்சுமி (51) நேரில் சென்று விசாரணை நடத்தினாா். இதுகுறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.