ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கணவா் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

செய்யாறு அருகே கணவா் இறந்த துக்கத்தில் மனைவி அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 6:31 pm

Din

செய்யாறு வட்டம், புரிசை கிராமம் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் ஜோதிலட்சுமி(36). இவரது கணவா் அய்யப்பன் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

கணவா் இறந்த நிலையில் ஜோதிலட்சுமி ஹோட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக தீராத வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். மேலும், கணவரை இழந்து மனவேதனையில் இருந்து வந்த ஜோதிலட்சுமி திங்கள்கிழமை அதிகளவில் மாத்திரைகளை விழுங்கி மயக்க நிலையில் வீட்டில் இருந்துள்ளாா்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜோதிலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து இறந்தவரின் தாய் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் தனபால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.