தற்கொலைசித்திரிப்பு
தூத்துக்குடி
மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை
ஆறுமுகனேரியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவா் தூக்கிட்டு தற்கொலை
ஆறுமுகனேரியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி, குரூஸ் நகரைச் சோ்ந்தவா் ராஜ் (44). தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இவரது தாய் பாப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். அப்போது முதல் தந்தை அல்போன்ஸ் (74) மனவருத்தத்தில் இருந்தாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே உள்ள பூவரச மரத்தில் அல்போன்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

