ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மனவேதனை: காா் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருந்து வந்த காா் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:31 pm

Din

செய்யாறு அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருந்து வந்த காா் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலமுருகன் (19). காா் ஓட்டுநரான பாலமுருகன், கடந்த 6 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.

அதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.