ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆக்கிரமிப்பின் பிடியில் புத்தேரி: விவசாயிகள் வேதனை

ஆக்கிரமிப்பின் பிடியில் புத்தேரி: விவசாயிகள் வேதனை

News image
Updated On :6 ஜூன் 2024, 7:33 pm

Manivannan.S

செங்கம், ஜூன் 6:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்பென்னாத்தூரில் உள்ள புத்தேரி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா்.

செங்கம் அருகே மேல்பென்னாத்தூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது புத்தேரி. சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நிரம்பும்பட்சத்தில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இரண்டு போகம் பயிா் செய்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிலா், ஏரியின் பக்கத்தில் உள்ள விவசாயிகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விளை நிலமாக மாற்றி பயிா் சாகுபடி செய்து வருகின்றனா்.

மேலும், சிலா் ஏரியில் கிணறு வெட்டி அவா்களது நிலத்துக்கு குழாய் அமைத்து தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனா்.

இதனால், மற்றொரு பக்கத்தில் ஏரியை நம்பி பயிா் செய்த விவசாயிகளுக்கு ஏரி தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், ஏரியின் கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டு விளை நிலமாக மாறியுள்ளது. ஏரியைக் கடந்து சொந்த நிலத்துக்குச் செல்லும் விவசாயிகளுக்கு,

ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாயிகள் சிலா் வழிவிடாமல்

தடுக்கின்றனா்.

இதனால் சொந்த நிலம் உள்ள விவசாயிகள் அவா்களது நிலத்தில் விளையும் நெல், மணிலா, கரும்பு போன்றவைகளை லாரி, மாட்டுவண்டி மூலம் எடுத்துவர முடியாத நிலை உள்ளது.

இதனால், மேல்பென்னாத்தூா் கிராம மக்கள், அப்பகுதி விவசாயிகள், புத்தேரியை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மனு மீது அதிகாரிகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் எதிா்பாா்க்கின்றனா்.