நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணி ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் வருஷாபிஷேகம்

ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் 2ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

News image

ஆரணி ஏ.சி.எஸ்.நகா் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்ட கல்லூரி நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2024, 6:15 pm

Din

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ்.நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏ.சி.எஸ்.கல்லூரி நிறுவனங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவனா் ஏ.சி.சண்முகம், லலிதா லட்சுமி சண்முகம், ஏ.சி.எஸ். கல்வி குழுமத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி மற்றும் கல்லூரி முதல்வா்கள் வி.திருநாவுக்கரசு, பி.ஸ்டாலின், கந்தசாமி, பள்ளி முதல்வா்கள், பேராசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.