நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜமாபந்தி நிறைவு விழாவில் 1,712 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,712 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

News image

வெம்பாக்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

செய்யாறு/செங்கம்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 1,712 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெம்பாக்கம் வட்டத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 19 -இல் தொடங்கி 25 வரை நடைபெற்றது.

தூசி, வெம்பாக்கம், நாட்டேரி, பெருங்கட்டூா் ஆகிய உள்வட்டங்களைச் சோ்ந்த 91 கிராமங்களில் இருந்து 1,493 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

நிறைவு விழா

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா்.

வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் த.ராஜூ முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் துளசிராமன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று,

தீா்வு காணப்பட்ட 276 மனுக்களுக்கு ரூ.45,71,454 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை, மரக்கன்றுடன் வழங்கிப் பேசினாா்.

விழாவில், வேளாண் துறை இணை இயக்குநா் ஹரகுமாா், வெம்பாக்கம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் வெங்களத்தூா் ஆறுமுகம், திமுக ஒன்றியச் செயலா்கள்

ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன், விவசாயி வாக்கடை புருஷோத்தமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் வட்டத்தைச் சோ்ந்த மேல்பள்ளிப்பட்டு, பாச்சல், இறையூா், செங்கம், புதுப்பாளையம் பிா்காவுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வந்தது.

இதில், அளிக்கப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான 1,226 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா் தலைமை வகித்தாா்.

புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி மனோஜ்குமாா் முன்னிலை வகித்தாா். செங்கம் வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா்.

இதில், விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிகள் குறித்தும் பேசினா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா 1,226 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, துணை வட்டாட்சியா்கள் ராஜேந்திரன், தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலா் ஜெயபாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செங்கம் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தனி வட்டாட்சியா் ஏ.மூா்த்தி, வட்ட துணை ஆய்வாளா் இரா.சண்முகமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சு.தட்சிணாமூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா்கள் பெ.தேவி, சீ.திருவேங்கடம், தோ்தல் துணை வட்டாட்சியா் வெ.சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆரணி நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் பச்சையம்மாள் சீனிவாசன், கனிமொழி சுந்தா், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், அக்ராபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.எஸ்.அன்பழகன் உள்ளிட்டோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவசாய மாநாட்டில் விவசாயிகள், ஆரணியில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் திறக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இரும்பேடு, பையூா், வேலப்பாடி ஆகிய பகுதிகளில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

விழாவில் தலைமை வகித்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெ.ராமகிருஷ்ணன்

பேசும்போது, ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுகளில் மொத்தம் 1,332 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 210 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள 1122 மனுக்கள் நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கிராம நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.