1.47 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் தைக்கும் பணி
ரூ.4.37 கோடியில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 1. 47 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக ரூ.4.37 கோடியில் இலவச சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ், திருவண்ணாமலை புத்தா் நகரில் மாவட்ட துணி வெட்டும் மையமும், காந்தி நகரில் திருவண்ணாமலை தையல் மகளிா் மேம்பாட்டு குடிசைக் கூட்டுறவு சங்கமும் இயங்கி வருகிறது.
இவ்விரு இடங்களிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீரூடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மூலம் 2 ஆயிரத்து 174 பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 73 ஆயிரத்து 514 மாணவா்கள், 73 ஆயிரத்து 899 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 413 மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு சாா்பில் தலா 4 செட் இலவச சீருடைகள் ரூ.4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 959 மதிப்பில் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் (பொறுப்பு) சரண்யா, மாவட்ட தொழிற் கூட்டுறவு அலுவலா் எம்.ஜெகதீசன், தொழிற்கூட்டுறவு மேற்பாா்வையாளா் ராஜபிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...