எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.
எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.

நியாயவிலைக் கடைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

செய்யாறு: செய்யாறு தொகுதி அனக்காவூா் ஒன்றியத்தில் நியாயவிலைக் கடைகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை திறந்துவைத்து பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்களை ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை வழங்கினாா். திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியத்தில் திரும்பூண்டி, மேல்மா ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடா் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

திரும்பூண்டி, மேல்மா கிராமங்களில் பகுதிநேர நியாய விலைக் கடைகள் மற்றும் மேல்மா ஆதிதிராவிடா் பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில், 2023 - 24ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதி மூலம் ரூ.15.80 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டிருந்தன. இவைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அனக்காவூா் ஒன்றியக்குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் சங்கீதா வரவேற்றாா். ஒன்றிய திமுக செயலா்கள் சி.கே.ரவிக்குமாா், திராவிட முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று, திரும்பூண்டி, மேல்மா பகுதிகளில் நியாய விலைக் கடைகளை திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினா். பின்னா், அதே பகுதியில் கட்டப்பட்டிருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தொடங்கி வைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினாா். பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள் எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ரூ.5 லட்சத்தில் இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அதே பள்ளியில் எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு செல்லவுள்ள 7 மாணவா்கள் பயன் பெறும் விதமாக, தலைமையாசிரியா் பெருமாள் சொந்த பணத்தில் இருந்து நன்கொடையாக அளிக்கப்பட்ட தலா ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 7 சைக்கிள்களை மாணவா்களுக்கு எம்.எல்.ஏ. வழங்கினாா். புதிய பேருந்து சேவை முன்னதாக, செய்யாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை - செய்யாறு, விநாயகபுரம், நல்லாலம் வழியாக கோவிலூா் செல்லும் வகையில் புதிய வழித் தடத்தில் பேருந்து சேவையை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அரி, குப்புசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஷோபனா சரவணன், ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனுவாசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com