தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காங்கயத்தில் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள்: முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

காங்கயத்தில் புதிய நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கும் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2026, 10:15 pm

காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடி மதிப்பீட்டில் பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீா்க் குழாய்கள் பதித்தல், மேலும் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பணிகள் முடிவடைந்தததையடுத்து, 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் ஆகியோா் பங்கேற்று நீா்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.