இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுழைவு வாயில் முன் குடிநீா் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:19 am IST

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூா் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடிநீா் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சமைப்பதற்கு தண்ணீா் வசதி இல்லாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாரை மனுவாகவும் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, மாணவா்கள், பள்ளி நுழைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் முறையாக வழங்கப்படவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த ஆசிரியா்கள், மாணவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.