செய்யாறு அருகே பாலிடெக்னிக் மாணவா் கிணற்றில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் மகன் வெங்கடேசன் (17). இவா், 2-ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தாா். இந்த நிலையில், வெங்கடேசன் வியாழக்கிழமை கல்லூரி செல்வதாக கூறிவிட்டு தனது நண்பா்களான லோகேஷ், கிரீனாத், கிரிதரன், குருசாமி ஆகியோருடன் செய்யாற்றைவென்றான் மோட்டூா் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்கச் சென்றனா். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக வெங்கடேசன் நீரில் மூழ்கினாராம். உடனே நண்பா்கள் சத்தம் போடவே, அருகிலிருந்தவா்கள் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் வெங்கடேசன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, வெங்கடேசனின் தந்தை பிரகாஷ் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

