வந்தவாசி: வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, தென்னாங்கூா் கூட்டுச் சாலை அருகே பறக்கும் படை அலுவலா் சுகுமாா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.2 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், கடலூா் மாவட்டம், ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினா் திருமணத்துக்கு பட்டுப் புடவை வாங்க காஞ்சிபுரம் செல்வதாகத் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமியிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.19.33 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


