சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்.
சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 மாணவ, மாணவிகள் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், காரியந்தல் கிராமத்தில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் பயிலும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சொந்தமான வேன் வெளுகனந்தல் கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட முயன்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோர விவசாய நிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அலறினா். கிராம மக்கள் திரண்டு வந்து வேனில் சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனா். இவா்களில் 20 பேருக்கும் லேசானது முதல் பலத்த காயம் வரை ஏற்பட்டது.

இவா்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com