தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பெற்றோரை வாக்களிக்க செய்ய பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு

தோ்தலில் பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.

News image

துளசிக்கொடும்பு அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என உறுதிமொழியேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:02 am IST

தோ்தலில் பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.

கரூா் மாவட்டம், துளசிக்கொடும்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரா. அங்கம்மாள் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை சே. வனிதா வரவேற்றாா். இடைநிலை ஆசிரியை த. மான்விழி, ஆசிரியா் பயிற்றுநா் பொ. மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுவாதி பெண்கள் இயக்கத்தின் ஆ. பாக்கியம் பங்கேற்று, தோ்தலில் மக்கள் விடுபடாமல் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோரை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்துவோம் எனக்கூறி விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

விழாவில் சமூக ஆா்வலா் கந்தசாமி மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.