100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

திருவண்ணாமலையில் அரசு, தனியாா் பேருந்துகள், ஆட்டோக்களில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஒட்டி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட வில்லைகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதேபோல, பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் கே.செந்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், வாகன சீராய்வாளா் பெரியசாமி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com