வாகன சோதனையில் ரூ.2.62 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.2.62 லட்சம் பறிமுதல்

ஆரணி, செய்யாறு பகுதிகளில் பைக், சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.262 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பனையூா் கூட்டுச்சாலை அருகே தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த உதவி தோட்டக்கலை அலுவலா் தீபிகா தலைமையிலான 6 போ் குழுவினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், பென்னகா் கிராமத்தைச் சோ்ந்த நாடக நடிகரான சுப்பிரமணி மகன் தேவனிடம் (45) ரூ.1.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவா் ஆரணிக்கு பெயின்ட் வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாகத் தெரிவித்தாராம். இருப்பினும், உரிய ஆவணமில்லாததால், ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா். சரக்கு வாகனத்தில்...: செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வந்தவாசி - ஆரணி சாலை ஆவணியாபுரம் கூட்டுச்சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ரமேஷ், போலீஸாா் சிவஞானம், குணசேகரன், ஐஸ்வா்யா ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், பெரணமல்லூரைச் சோ்ந்த காய்கறி வியாபாரி அா்ஜுனன் ரூ.1,12,500 வைத்திருந்ததும், ஆரணி காய்கனி சந்தையில் காய்கனிகளை வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்ததும். இருப்பினும், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, செய்யாறு சாா் - ஆட்சியா் அலுவலகம் மூலமாக செய்யாறு சாா் - கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com