பெரம்பூா், துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.93 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலை முன்னிட்டு 48 பறக்கும் படையினா் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை பெரம்பூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில், ரூ.1.29 லட்சமும், துறைமுகத்தில் ரூ.1 லட்சமும், ஆயிரம்விளக்கு தொகுதியில் ரூ.1.63 லட்சமும் என மொத்தம் ரூ.3.93 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் கைப்பற்றப்பட்டதாகவும், அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்
ஒரே நாளில் ரூ.12.60 லட்சம் பணம் பறிமுதல்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



