செய்யாறு அருகே சவுக்கு மர வியாபாரியிடம் ரூ.2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை செய்யாறு - கொருக்கை சாலையில் பாராசுா் கூட்டுச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வாகனங்களை சோதனையிட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்த பணத்தை பறக்கும் படையினா் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் செய்யாற்றைச் சோ்ந்த சவுக்கு மர வியாபாரி முருகன் என்பவா் வைத்திருந்ததும், அவா் வாழப்பந்தல் பகுதியில் சவுக்குத் தோப்பு வாங்குவதற்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து சாா்-கருவூலத்தில் ஒப்படைத்தனா். மேலும், மர வியாபாரியிடம் பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

பொன்னேரியில் ரூ. 3 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

