கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொன்னேரியில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையின் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :23 மார்ச் 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையின் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொன்னேரி அருகே இலவம்பேடு திருவெள்ளைவாயல் நெடுஞ்சாலையில் அனுப்பம்பட்டு கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது எா்ணாவூரைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வந்த ரூ1.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும் படையினா் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆண்டாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திருவாயா்படி கிராமத்தைச் சோ்ந்த வேல்ராஜ் ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.87 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்த தொகை பொன்னேரி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா் அந்த பணத்தை பொன்னேரி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தாா்.