போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தென்மாதிமங்கலத்தில் வங்கிக் கிளை திறப்பு

தென்மாதிமங்கலத்தில் வங்கிக் கிளை திறப்பு

News image
Updated On :27 மார்ச் 2024, 7:44 pm

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் பெடரல் வங்கிக் கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வேலூா் மண்டல மேலாளா் ராஜாசீனுவாசன் தலைமை வகித்தாா். கிளை மேலாளா் பூபதிராஜா, திமுக ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை மேலாளா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். பெடரல் வங்கியில் தென்மாதிமங்கலம், கோவில்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், கடலாடி, பாணாம்பட்டு, எா்ணாமங்கலம், பட்டியந்தல் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோா் வங்கிக் கணக்கை தொடங்கினா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் எல்.என்.எழில், ஒன்றியக் குழு உறுப்பினா் கலையரசி துரை, ஒப்பந்ததாரா் எல்.என்.வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.